வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா.

வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா வரும் 16ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் 9 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. 17 நாள்கள் இடம்பெறும்
திருவிழாவில் பகல் வசந்த மண்டபப் பூஜை முற்பகல் 10.30 மணிக்கும் மாலைத் திருவிழா வசந்த மண்டப பூஜை மாலை 5.30 மணிக்கும் ஆரம்பமாகும் என்று அறங்காவலர் சபையினர் அறிவித்துள்ளனர். 23ஆம் திகதி 8ஆம் திருவிழாவாக குருக்கட்டு விநாயகர் தரிசனம், 24ஆம் திகதி 9ஆம் திருவிழாவாக வெண்ணைத் திருவிழா, 25ஆம் திகதி 10ஆம் திருவிழாவாக துகில் திருவிழா, 26ஆம் திகதி 11ஆம் திருவிழா பாம்புத் திருவிழா, 27ஆம் திகதி 12ஆம் திருவிழாவாக கம்சன் போர்த் திருவிழா, 28ஆம் திகதி 13ஆம் திருவிழாவாக வேட்டைத் திருவிழா, 29ஆம் திகதி 14ஆம் திருவிழாவாக சப்பறத் திருவிழா (இரவு 8 மணிக்கு), 30ஆம் திகதி 15ஆம் திருவிழாவாக தேர்த் திருவிழா, ஒக்டோபர் முதலாம் திகதி சமுத்திரத் தீர்த்தத் திருவிழா மற்றும் ஒக்டோபர் 2ஆம் திகதி கேணித் தீர்த்தம் முற்பகல் 10 மணிக்கும் இரவு 7 மணிக்கு கொடியிறக்கத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன.
சப்பறத் திருவிழாவில் வசந்த மண்டப் பூஜை மாலை 6 மணிக்கும் தேர்த் திருவிழாவில் வசந்த மண்டபப் பூஜை காலை 7 மணிக்கும் ஆரம்பமாகவுள்ளது. அத்துடன், திருவிழா நாள்களில் அன்னதானம் பொதி செய்யப்பட்டு வழங்கப்படும் என்றும் ஆலய அறங்காவலர் சபை தெரிவித்துள்ளது.
மேலும் அடியவர்களின் அங்கப்பிரதச்சை மற்றும் காவடி எடுத்தல் என்பன தடை செய்யப்பட்டுள்ளன. அடியவர்கள் முகக் கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியைப் பேணவேண்டும் என்றும் ஆலய அறங்காவலர் சபை கேட்டுள்ளது. வல்லிபுர ஆழ்வார் ஆலய திருவிழா நாள்களில் பருத்தித்துறை – மந்திகை ஊடாகவும் பருத்தித்துறை – தும்பளை ஊடாகவும் யாழ்ப்பாணத்திலிருந்தும் ஆலயத்துக்கு சிறப்பு பேருந்து சேவைகள் இடம்பெறவுள்ளன.