மஹிந்தவைப் பிரதமராக்குமாறு ரணிலிடம் கோரவில்லையாம்! – ‘மொட்டு’ கூறுகின்றது.

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நாம் கோரிக்கை விடுக்கவில்லை.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. தெரிவித்தார்.
மேலும், இது போன்ற செய்திகள் பொய்யானவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஊடகங்களிடம் இன்று கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.