மொட்டுவினரைப் பாதுகாப்பதால் ரணிலே ஜனாதிபதி வேட்பாளராம் – ஐக்கிய மக்கள் சக்தி கூறுகின்றது.
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மொட்டு எம்.பிக்களை நல்லமுறையில் பாதுகாத்துக்கொண்டு போகின்றார். இதனால் ரணிலையே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு மொட்டுக் கட்சியினர் விரும்புகின்றனர்” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“மொட்டுக் கட்சி எம்.பிக்களுக்குத் தேர்தலில் விருப்பமில்லை. இவர்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவர்களை நல்ல முறையில் பாதுகாத்துக்கொண்டு போகின்றார். இதனால் ரணிலையே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு மொட்டுக் கட்சியினர் விரும்புகின்றனர்.
நாம் எமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவையே வேட்பாளராக நிறுத்துவோம். இதில் மாற்றமில்லை. அவரே ஜனாதிபதியாகத் தெரிவாவார்.” – என்றார்.