பிரதேச வாசிகளின் தாக்குதலுக்குள்ளான நான்கு பொலிஸ் அதிகாரிகள்.

பண்டாரகம, அளுத்கம பகுதியில் பிரதேச வாசிகளின் தாக்குதலுக்குள்ளான நான்கு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.
அளுத்கம மாராவ பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை பொலிஸ் நிலையம் நோக்கி அழைத்து செல்லும் போது பொலிஸ் வாகனத்தை வழிமறித்த பிரதேசவாசிகள் பொலிஸார் மீது கற்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால் நான்கு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்தனர்.
இதனால் உண்டான பதற்றமான நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அண்டியுள்ள பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் அதிகாரிகளும் பொலிஸ் விசேட அதிரடைப் படையினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.