விரைவில் சப்ரகமுவ மாகாண ஆளுநராகின்றார் நவீன்?

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க, சப்ரகமுவ மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார்.
தற்போதைய ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ வெளிநாடு சென்றிருப்பதால், அவர் நாடு திரும்பிய பின்னர் புதிய ஆளுநர் நியமனம் இடம்பெறும் எனத் தெரியவருகின்றது.
நான்கு மாகாணங்களுக்கான ஆளுநர் பதவிகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்திருந்தார். இதன்படி மூன்று மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று நியமிக்கப்பட்டனர்.