ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
தீர்ப்பை வாசித்த நீதிபதி, ஜல்லிக்கட்டுக்கு அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசரச் சட்டம் திருப்தியளிக்கிறது. அவசர சட்டம் செல்லும்” என தெரிவித்தனர். இதன்மூலம் ஜல்லிக் கட்டு நடத்துவதற்கு தடையில்லை என்பது தெளிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு, கர்நாடகாவில் கம்பளா, மகாராஷ்டிராவில் சக்கடி ஆகிய பாரம்பரிய விளையாட்டுகளை நடத்த அந்தந்த மாநில அரசுகள் சிறப்பு சட்டங்களை இயற்றியுள்ளன. இந்த சட்டங்களுக்கு எதிராகவும், விலங்குகளை மையமாகக் கொண்ட விளையாட்டுகளுக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.