புதிய நாடாளுமன்றம்.. வரும் 28 ஆம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

புதிய நாடாளுமன்ற வளாகத்தை வரும் மே 28ஆம் தேதி அன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்பணிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் ரூ.970 கோடி செலவில் கடந்த 2020 டிசம்பர்10ஆம் தேதி தொடங்கப்பட்டன. இந்த பணிகள் முழுவீச்சில் நடந்து முடிந்துள்ளன. மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 300 உறுப்பினர்களும் கூட்டு அமர்வில் ஒரே நேரத்தில் ஆயிரத்து 280 பேர் அமர்ந்து, அலுவல்களை நடத்தும் வகையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முக்கோண வடிவில், 4 மாடிகளுடன் 64ஆயிரத்து 500 சதுர அடி அளவில் இந்த கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் முடிந்த நிலையில், கட்டடத்தை திறந்து வைக்கும்படி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா,பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதனை ஏற்ற பிரதமர் மோடி வரும் 28ஆம் தேதி, புதிய நாடாளுமன்ற கட்டடத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்க இருக்கிறார். சுயசார்பு இந்தியாவின் பிரதிபலிப்பாக புதிய நாடாளுமன்ற கட்டடம் இருப்பதாக மக்களவை செயலக செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பசுமை ஆற்றல், உயர்தர தொழில்நுட்ப வசதிகள் இந்த கட்டடத்தில் இடம் பிடித்துள்ளன. இந்த கட்டுமான பணிகளை டாடா ப்ராஜக்ட்ஸ் நிறுவனம் மேற்கொண்டது.

Leave A Reply

Your email address will not be published.