MT New Diamond கப்பலில் பரவிய தீ முழுமையாக கட்டுப்பாட்டில்
MT New Diamond கப்பலில் பரவிய தீ முழுமையாக கட்டுப்பாட்டில்
தீ, புகை எதுவும் தென்படவில்லை – கடற்படை, விமானப்படை தகவல் தெரிவித்து உறுதிப்படுத்தியுள்ளது.
விசேட நிபுணர் உள்ளிட்ட மூவர் கொண்ட குழு MT New Diamond கப்பலுக்குள் சென்றுள்ளனர்.
குறித்த கப்பல் மேலும் ஆழமான கடற்பிராந்தியத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில், MT New Diamond கப்பல் 41 கடல் மைல் தொலைவில் தற்போது காணப்படுகின்றது.
குறித்த கடற்பரப்பு கொந்தளிப்பாக காணப்படுவதாகவும் பலத்த காற்றுடன் கூடிய வானிலை காணப்படுவதாகவும் கடற்படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
கப்பல் தீப்பற்றிய கடல் பிரதேசத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட எண்ணெய் மாதிரியை பகுப்பாய்விற்கு அனுப்புமாறு கடல்சார் சூழல்பாதுகாப்பு அதிகார சபைக்கு சட்ட மா அதிபர் பணித்துள்ளார்.
MT New Diamond எண்ணெய்க் கப்பலின் அருகில் பெறப்பட்ட குறித்த மாதிரியை அரச இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்புமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா அறிவுறுத்தியுள்ளார்.
எண்ணெய்க் கப்பல் தொடர்பாக சட்ட மா அதிபர் சற்றுமுன் விடுத்த உத்தரவு
இந்நிலையில், தீ விபத்துக்கு உள்ளான MT New Diamond எண்ணெய்க் கப்பல் காணப்படும் இடத்தில் எண்ணெய்ப் படிவுகளை அவதானிக்க முடிந்துள்ளதாகவும், இரண்டு கடல்மைல் தொலைவுக்கு குறித்த எண்ணெய்ப் படிவுகள் காணப்படுவதாகவும் இலங்கைக் கடற்படை குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், கப்பலைச் சுற்றியுள்ள கடற்பிரதேசத்தில் நேற்றைய தினம் டீசல் படிவுகளை அவதானிக்க முடிந்ததாகவும், கடல் பிரதேசத்துக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையில், இரசாயனங்களை தூவ நடவடிக்கை எடுத்ததாகவும், கடற்படை குறிப்பிட்டுள்ளது.
– Sathasivam Nirojan