இலங்கை மற்றும் மாலத்தீவுக்கு செல்லவிருந்த 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஐஸ் கேரளாவில் பறிமுதல்..

கடந்த 21ஆம் திகதி, இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கு சட்டவிரோதமாக கொண்டு செல்ல தயாரிக்கப்பட்ட 12000 கோடி ரூபா பெறுமதியான 2600 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்களை இந்திய கேரள பொலிஸார் கைது செய்தனர்.
இரண்டு சந்தேக நபர்களில் ஒருவர் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட இந்தியாவில் வசிப்பவர், மற்றவர் பாகிஸ்தானியர்.
கேரள மாநில போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், கடற்கரை அருகே உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்த போது, இந்த ஐஸ் போதைப்பொருள் பதுக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சந்தேகநபர்கள் இருவரையும் போதைப்பொருள் கையிருப்பையும் கேரள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு கேரள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.