கோமாரி ஊரணியில் நிலக்கடலை அறுவடை…

பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோமாரி ஊரணி கிராமத்தில் விவசாய வாரத்தினை முன்னிட்டு நிலக்கடலை அறுவடை விழா சம்பிரதாய முறைப்படி நடைபெற்றது.
இந்நிகழ்வு கோமாரி ஊரணி கிராமத்தில் விவசாய போதனாசிரியர் கோ.சகீந்தன் தலைமையில் இடம்பெற்றது.இதன் போது தமிழர் பாரம்பரிய முறையில் புதிர் எடுத்தல் மற்றும் பொங்கல் பூஜை வழிபாடுகள் என்பன இடம்பெற்றது.
இவ் அறுவடை விழாவில் பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்ததுடன் இந்நிகழ்வில் உதவி விவசாய போதனாசிரியர் எஸ்.தேவராணி,பாடவிதான உத்தியோகத்தர் கே.சுரேஸ்குமார்,நிலைய பொறுப்பதிகாரி ஆர்.யோகநாதன்,கிராம உத்தியோகத்தர் ராஜேந்திரன் ஆகியோர் அதிதியாக கலந்து கொண்டதோடு மற்றும் பல விவசாயிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
Sathasivam Nirojan