மீண்டும்,மீண்டு வருமா பப்ஜி
பப்ஜி நிறுவனம், சீன நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ததைத் தொடர்ந்து இந்திய நிறுவனத்துடன் இணைந்து செயல்பட இருப்பதாக தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளை இந்திய அரசு தடை செய்தது. சீனா உடனான எல்லைப் பிரச்சனையில் மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கையில் சீன ஆப் க்களை தடை செய்வதும் ஒரு நடவடிக்கையாக இந்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டது .
தென் கொரியாவைச் சேர்ந்த பப்ஜி கார்பரேசன் இந்தியாவில் பப்ஜி விளையாட்டை விநியோகிக்க சீன நிறுவனமான டென்சென்ட் ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டிருந்த ஒப்பந்தத்தை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ரத்து செய்தது.
இந்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைளை மதிப்பதாக கூறிய பப்ஜி நிறுவனம் இந்தியாவில் மீண்டும் பப்ஜி விளையாட்டு செயலியை பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது. சட்ட வரைமுறைகளுக்குள்பட்டு இந்தியாவில் செயலியை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவர உள்ளதாக பப்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது.
புதிய உரிம ஒப்பந்தத்தின் அடிப்படையில் பப்ஜி நிறுவனம் இந்திய நிறுவனம் ஒன்றுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அவ் ஒப்பந்தம் உறுதியானால் பப்ஜி விளையாட்டு இந்தியாவில் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிகின்றது..