சமூக ஊடகங்களில் மூழ்கும் குழந்தைகள், இளம் பருவத்தினருக்கு மனநிலை பாதிக்கிறது
சமூக ஊடகங்கள் இளையர்களை, குறிப்பாக பருவ வயது பெண்களின் மனநிலையைப் பாதிக்கிறது என்று அமெரிக்காவின் உயர்மட்ட அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
மூளை வளர்ச்சியின் முக்கியமான கட்டத்தில் இருக்கும் குழந்தைகளை தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்றார் அவர். அமெரிக்க சர்ஜன் ஜெனரலான விவேக் மூர்த்தி. சமூக ஊடகங்களால் ஒரு சில நன்மைகள் இருந்தாலும் குழந்தைகளின் நலன்களைப் பாதிக்கும் அம்சங்களும் இருக்கின்றன,” என்றார்.
“நமது இளையர்களின் மனநிலையைப் பாதிக்கும் நெருக்கடிக்கு மத்தியில் இருக்கிறோம். சமூக ஊடகங்கள் இந்த நெருக்கடிக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. இது, உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய விவகாரம்,” என்று தனது ஆலோசனைக் குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களின் பயன் பாட்டால் உடல் உருவப் பிரச்சினைகள் ஏற்படலாம், உணவு உண்ணும் முறையைப் பாதிக்கலாம். நல்ல தூக்கத்தைக் கெடுக்கலாம்.
சமூகத்துடன் ஒப்பிடுவது மற்றும் தாழ்வு மனப்பான்மைக்கு வழிவகுக்கலாம் என்று இளம் பருவத்தினரிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளை மேற்கோள்காட்டி ஆலோசனை கூறுகிறது.
சமூக ஊடகங்களில் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரத்துக்கு மேல் செலவிடும் இளம் பருவத்தினருக்கு மன அழுத்தம், பதற்றம் போன்ற மனநலப் பிரச்சினைகளின் அபாயத்தை இரட்டிப்பாக்குகிறது.
பெரும்பாலான இளம் பருவத்தினர், சமூக ஊடகங்கள் சிரமமான சூழ்நிலையில் ஆதரவாக இருப்பதாகவும் நண்பர்களுடன் இணைந்திருக்கவும் புத்தாக்கத்திற்கு உதவுகிறது என்றும் கூறுகின்றனர். இந்த நன்மைகளை எல்லா வயதினருக்கும் கொண்டு செல்லும் வகையில் பாதுகாப்பு அம்சங்களை கொள்கை வகுப்பாளர்கள் மேம்படுத்த வேண்டும் என்று ஆலோசனை வலியுறுத்தியுள்ளது.
“இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் திரையில் நேரத்தை செலவழித்தால், அந்த குழந்தைகளின் அறிவுசார் திறன்களின் வளர்ச்சியில் பெரிய எதிர்மறை தாக்கம் ஏற்படும். அந்தக் குழந்தைகளுக்கு பத்து அல்லது பன்னிரெண்டு வயதாகும் போது இந்த தாக்கத்தின் விளைவு தெரியும்.”
உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளின்படி, இரண்டு முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகள் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை மட்டுமே மின்னணு திரையைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். இது ஒரு பெரியவரின் மேற்பார்வையிலும் உள்ளது.
ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, கல்வி நடவடிக்கைகளுக்கு வெளியே திரை நேரத்தை அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை கட்டுப்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
பதினான்கு மற்றும் பன்னிரெண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போது அதிகம் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
“பத்து முதல் பத்தொன்பது வயதுக்கு இடைப்பட்ட காலம் இளமைப் பருவம். இந்த நேரத்தில், குழந்தைகள் உணர்ச்சிகளை அதிகம் கையாளுகிறார்கள். இந்த நேரத்தில், சகாக்களின் கருத்துகளின் அடிப்படையில் பல முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இந்த நேரத்தில், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது குழந்தைகள் பல்வேறு வழிகளில் பாதுகாப்பற்றவர்களாக மாறலாம்.
இவற்றை வரம்பிற்கு மேல் பயன்படுத்துவதால், இந்த குழந்தைகள் மனச்சோர்வு, பதட்டம் மற்றும் இணையவெளியில் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். சமூக திறன்கள் மேம்படுவதில்லை. சமூக உறவுகள் பலவீனமடைகின்றன. கட்டமைக்கப்பட்ட செயற்கையான உறவுகளால், இந்தக் குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சியடையாது. இளம் வயதிலேயே வன்முறை வீடியோ கேம்கள் போன்றவற்றுக்கு அடிமையாகிவிட்டால், பெரியவர்கள் ஆனதும், இந்தக் குழு வன்முறை குணங்களை வெளிப்படுத்தும் நிலை உருவாகலாம்.” என சிறுவர் மற்றும் இளம்பருவ மனநல நிபுணர் வைத்தியர் தர்ஷனி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.