‘பிச்சைக்காரன் 2’ வெற்றியைக் கொண்டாட தயாரான விஜய் ஆண்டனி.
விஜய் ஆண்டனி இயக்கி நடித்திருந்த ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படம் கடந்த 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இதில் காவ்யா தப்பார், ராதா ரவி, ஒயி ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வெளியான ஒரு வாரத்தில் ரூ.24 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படத்தின் வெற்றியைக் படக்குழு கொண்டாட தயாராகி வருகிறது. அதன்படி, வருகிற 27-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் இப்படத்தின் வெற்றி விழா கொண்டாடப்படவுள்ளது. இதனை விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளப் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார்.