234 தொகுதிகளுக்கும் அதிரடி உத்தரவு போட்ட நடிகர் விஜய்.
தமிழ் சினிமாவின் இளைய தளபதியாக என்றும் மக்கள் மனதில் இடம் பிடித்த நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய்.
இவர் வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து அடுத்த அப்டேட்டிக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
நடிகர் விஜய் சினிமாவை தாண்டி இப்போது அரசியலில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வந்துகொண்டே இருக்கிறது, ஆனால் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இந்த நிலையில் விஜய் தனது மக்கள் இயக்கம் குழுவினருக்கு அதிரடி உத்தரவு போட்டுள்ளார்.
இதுகுறித்து வெளிவந்த அறிக்கையில், உலகம் முழுவதும் மே 28-ம் தேதி அன்று “உலக பட்டினி தினம்” அனுசரிக்கப்படுகிறது. உலகளவில் நீண்டகால பட்டினியால் வாடும் மக்களை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.
விஜய்யின் சொல்லுக்கிணங்க, உலக பட்டினி தினத்தினை முன்னிட்டு பசி எனும் பிணி போக்கிடும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “தளபதி விஜய் மக்கள் இயக்கம்” சார்பாக “தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்” திட்டம் மூலம் வருகின்ற 28.05.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பகல் 11 மணியளவில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம், ஒன்றியம் மற்றும் பகுதிகளில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒருவேளை (மதிய) உணவு வழsங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.