ஜப்பானில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று மதியம் 3.33 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 65 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம் சுமார் 6.1 ரிக்டர் அளவில் பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் வெளியாகவில்லை.