அலவாங்கால் குத்தி மனைவியைக் கொன்ற கணவன்! – மதுபோதையில் வெறியாட்டம்.

இளம் குடும்பப் பெண் ஒருவர் அலவாங்கால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மதுபோதையில் வீட்டுக்கு வந்த அவரின் கணவனே இந்த வெறியாட்டத்தைப் புரிந்துள்ளார்.
இந்தச் சம்பவம் வத்தளைப் பொலிஸ் பிரிவில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் சாவடைந்த 28 வயதுடைய பெண், அரச வைத்தியசாலை ஒன்றில் தாதியாகப் பணிபுரிந்தார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர் மூன்று வயதுடைய ஆண் குழந்தையின் தாய் ஆவார்.
கொலையாளியான கணவனைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் ராகம வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.