ஆன்ட்ராய்டு போன்களை குறிவைத்து பரவும் வைரஸ்…மத்திய அரசு எச்சரிக்கை!
ஆன்ட்ராய்டு போன்களை குறிவைத்து தாக்கும் ‘Daam’என்ற வைரஸ் பரவுவதாக மத்திய அரசு எச்சரிக்கை பிறப்பித்துள்ளது. இந்த வைரஸ்கள் மொபைல் போன்களை பாதித்து ஊடுருவி ஹேக் செய்வதாக தெரிவித்துள்ளது. சென்சிடிவான டேட்டாக்காளான செல்போன் அழைப்புகள், தொடர்புகள், ஹிஸ்டரி மற்றும் கேமராக்கள் ஆகியவற்றை ஹேக் செய்யும் திறன் கொண்டவை என தேசிய சைபர் பாதுகாப்பு முகமை எச்சரிக்கை(CERT) அறிக்கை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய சைபர் பாதுகாப்பு முகமை அமைப்பு, நாட்டின் சைபர் பாதுகாப்பை கண்காணித்து உறுதி செய்யும் பணியை ஈடுபடுகிறது. ஆன்ட்ராய்டு போன்களை குறிவைத்து தாக்கும் வைரஸ், மூன்றாம் தரப்பு இணையதளங்கள் மூலமாகவோ நம்பகத்தன்மை இல்லாத தளங்களில் இருந்து டவுன்லோடு செய்யும் அப்ளிகேஷன் மூலமாகவோ இது பரவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது போன்களை ஹேக் செய்து பாஸ்வார்டுகளை மாற்றுவது, ஸ்க்ரீன் ஷாட் எடுப்பது, எஸ்எம்எஸ்களை திருடுவது, பைல்களை அப்லோடு மற்றும் டவுன்லோ்டு செய்வது போன்றவற்றை செய்யக்கூடியது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, பயனாளர்கள் அனைவரும் அப்டேட் செய்யப்பட்ட ஆன்டி வைரஸ் மற்றும் ஆன்டி ஸ்பைவேர் மென்பொருள்களை இன்ஸ்டால் செய்து ஆன்ட்ராய்டு போன்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், சந்தேகத்திற்குரிய செல்போன் நம்பர்களை பார்த்து கவனமாக இருக்க வேண்டும். மோசடிகாரர்கள் அனைவரும் இது போன்ற போலி நம்பர்களை வைத்துக்கொண்டு வைரஸ்களை பரப்புவதாக சைபர் ஏஜென்சி கூறியுள்ளது.
மேலும் ‘bitly’ and ‘tinyurl’ hyperlinks like: “http://bit.ly/” “nbit.ly” and “tinyurl.com/”. AD போன்ற URL கொண்ட குறுஞ்செய்திகள் செல்போனுக்கு வந்தாலோ செல்போனில் இருந்தாலோ அதை டெலிட் செய்யவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சந்கேத்திற்குரிய வகையில் செல்போன்களுக்கு வரும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.