தென்மராட்சியில் கிணற்றில் வீழ்ந்த சிறுமி மரணம்!

யாழ்ப்பாணம், தென்மராட்சி – மிருசுவிலில் 6 வயதுச் சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
மிருசுவில் வடக்கைச் சேர்ந்த சசிகரன் சிம்சிகா என்ற சிறுமியே வீட்டு கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்துள்ளார்.
மூன்று மணி நேரமாக சிறுமியைக் காணவில்லை என்று தேடிய நிலையில், மாலை 4 மணியளவில் கிணற்றுக்குள் விழுந்திருந்தமை கண்டறிப்பட்டது.
உடனடியாக சிறுமியை மீட்டு கொடிகாமம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.