யாழில் ஈ.பி.டி.பியின் உள்ளூராட்சி சபை வேட்பாளர் கார் மோதியதில் சாவு!

சைக்கிளில் பயணித்த வயோதிபரைக் கார் பின்னால் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
ஏ – 9 பிரதான வீதியில் சாவகச்சேரி நியூமெடிக்கெயர் மருத்துவமனைக்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் ஈ.பி.டி.பி. கட்சியின் உள்ளூராட்சி சபை வேட்பாளரான நுணாவில் மத்தியைச் சேர்ந்த கந்தசாமி கமலநாதன் (வயது – 74) என்பவரே உயிரிழந்துள்ளார்.
திடீர் சுகவீனமுற்று சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட உறவினரைப் பார்ப்பதற்கு அவர் சென்றுள்ளார். எனினும், அந்த உறவினர் இறந்துவிட்டாரென மருத்துவர்கள் கமலநாதனிடம் தெரிவித்துள்ளனர்.
அந்தத் தகவலை வீட்டாருக்குச் சொல்வதற்காகச் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கார் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.