மக்களவையில் செங்கோலை நிறுவினார் பிரதமர் மோடி!

நாடாளுமன்ற திறப்பு விழாவையொட்டி மக்களவையில் செங்கோலை நிறுவினார் பிரதமர் நரேந்திர மோடி. ’

தமிழக ஆதீனங்களிடமிருந்து சிறப்பு வழிபாடு நடத்தி அளிக்கப்பட்ட செங்கோலை மக்களவை தலைவர் இருக்கை அருகே பிரதமர் மோடி நிலைநிறுத்தினார்.

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா சா்வ மத பிராா்த்தனைகளுடன் ஞாயிற்றுக்கிழமை இன்று (மே 28) நடைபெற்று வருகிறது. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் அதிகாரபூா்வமான நிகழ்ச்சி காலை 12 மணிக்கு தொடங்குகிறது. ஆனால் அதற்கு முன்னதாக பாரம்பரிய சடங்குகள் காலையிலேயே தொடங்கியது.

இதற்காக புதிய நாடாளுமன்ற வளாகத்திற்கு பிரதமா் நரேந்திர மோடி காலை 7.15 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் வருகை புரிந்தார்.

காலை 7.30 மணியளவில் ஹோமம் பூஜைகளுடன் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா தொடங்கியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

வேத மந்திரங்கள் முழங்க தமிழக ஆதீனங்கள், ஓதுவார்கள் நடத்தும் சிறப்பு வழிபாட்டில் பிரதமர் கலந்துகொண்டு, வழிபாட்டில் ஈடுபட்டார். அவருடன் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவும் கலந்துகொண்டார்.

நடாளுமன்ற கட்டட திறப்பு விழாவையொட்டி சிறப்பு பூஜைக்குப் பிறகு ஆதீனங்களிடமிருந்து செங்கோலை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுக்கொண்டார்.

பூஜை நிகழ்ச்சிக்கு பிறகு செங்கோல் முன்பு மண்டியிட்டு பிரதமர் வணங்கினார். பின்னர் செங்கோலை ஏந்தியபடி ஆதீனங்களிடம் தனித்தனியாக ஆசிபெற்றார்.

அதனைத் தொடர்ந்து திருவாவடுதுறை உள்ளிட்ட ஆதீனங்களிடமிருந்து செங்கோலை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுக்கொண்டார். அதனைப் பெற்றுக்கொண்டு ஆதீனங்களின் புடைசூழ நாடாளுமன்ற வளாகத்தினுள் பிரதமர் நரேந்திர மோடி நடந்து சென்றார்.

நாடாளுமன்றத்தில் மக்களவை தலைவர் இருக்கை அருகே செங்கோலை பிரதமர் நரேந்திர மோடி நிறுவினார். செங்கோலை செங்குத்தாக நிலைநிறுத்தி, குத்துவிளக்கு ஏற்றிவைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.