யாழ்ப்பாணத்தில் பொலிஸ் சோதனை சாவடி மீது தாக்குதல்… சந்தேக நபர் கைது…
யாழ்ப்பாணம் பண்ணை வீதியிலுள்ள பொலிஸ் சோதனை சாவடி மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று (28) கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் பண்ணை வீதியில் அமைந்துள்ள தெய்வ உருவம் தொடர்பில் பெரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து அந்த இடத்தில் பொலிஸ் சோதனைச் சாவடி ஒன்றை அமைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.அந்த சோதனைச் சாவடியே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
பொலிஸ் நிலையத்தின் மீதான தாக்குதல் காரணமாக அதன் கண்ணாடிகள் மற்றும் சாவடி சேதமடைந்துள்ளதுடன், தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.