இலங்கைக்கு மற்றுமொரு கடன் தொகை ! ADB 350 மில்லியன் டாலர்களை கொடுக்க முடிவு!
ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு வரவு செலவுத் திட்ட உதவியாக $350 மில்லியன் டொலரை சிறப்புக் கடனாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தக் கடன் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான நிதியளிப்பு வசதியினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிதியுடன் ஒரே நேரத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிதி என ADB தெரிவித்துள்ளது.
இந்த கடனுதவி குறித்து கருத்து தெரிவித்த ADB தலைவர் மசட்சுகு அசகாவா……
“நாட்டில் ஏற்பட்டுள்ள ஆழமான நெருக்கடி மற்றும் இலங்கை மக்கள், குறிப்பாக ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள், குறிப்பாக பெண்கள் மீதான அதன் தாக்கம் குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கி கவலை கொண்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியானது பொருளாதார ஸ்திரப்படுத்தல், நிலையான மீட்சி மற்றும் அனைவரையும் உள்ளடக்கியமைக்கான தற்போதைய சவால்களை எதிர்கொள்ளும் இலங்கையுடன் இணைந்து நிற்க உறுதிபூண்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.