மத நல்லிணக்கத்தை பாதுகாக்க விசேட பொலிஸ் பிரிவொன்றை ஸ்தாபிக்க உடனடியாக நடவடிக்கை!
மத நல்லிணக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும் தனிநபர்கள் அல்லது குழுக்களுக்கு எதிராக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதற்கு விசேட பொலிஸ் பிரிவொன்றை ஸ்தாபிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, மத முரண்பாடுகளை ஏற்படுத்தி நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைத்து அரசாங்கத்தை தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதற்கு சிலர் முயற்சிப்பதாக புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ள நிலையில் ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான நாசகார செயல்களை கண்காணித்து நாட்டின் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயல்களை தடுப்பதே ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு அமைய ஸ்தாபிக்கப்பட்ட புதிய பொலிஸ் பிரிவின் பொறுப்பாகும் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.