IPL – 5வது முறையாக சிஎஸ்கே அணி 5வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது.

ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு தொடரின் சாம்பியன் பட்டத்தை சிஎஸ்கே அணி 5வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது. இதன் மூலம் மும்பையின் சாதனையை சிஎஸ்கே சமன் செய்துள்ளது. சிஎஸ்கே வின் தோல்வியின் பிடியில்இருந்த நிலையில், ஜடேஜாவின் அபார ஆட்டத்தால் சிஎஸ்கே கோப்பையை வென்றது.

மழை பெய்யும் என்பதால் , இரண்டாவது பேட்டிங் செய்தால் சாதகமாக இருக்கும் என்று கருதி, டாஸ் வென்ற தோனி, பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் சாஹா, சுப்மன் கில் ஜோடி அதிரடியாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்தார்.

 

சுப்மன் கில் 20 பந்தில் 39 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்ப, சிறப்பாக விளையாடிய சாஹா 39 பந்தில் 54 ரன்கள் சேர்த்து தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். 3வது விக்கெட்டுக்கு இணைந்த தமிழக வீரர் சாய் சுதர்சன், சிஎஸ்கே பந்துவீச்சை சிதறடித்தார். குறிப்பாக, சுப்மன் கில் தான் அடிப்பார் என சிஎஸ்கே எதிர்பார்த்த நிலையில், சிலப்பெஸ்க்கு வெளியிலிருந்து சாய் சுதர்சன்இ சிஎஸ்கே பவுலர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

47 பந்துகளில் சுதர்சன் 96 ரன்கள் விளாசிய நிலையில், ஹர்திக் பாண்டியா 12 பந்தில் 21 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டு இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது. 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 0.3 ஓவரில் 4 ரன்கள் எடுத்த நிலையில், மழையால் ஆட்டம் தடைப்பட்டது.

Australia-க்கு ஏதிராக Ashwin பயன்படுத்திய Two-Card Trick Bowling
இதனையடுத்து , 2 மணி நேரத்திற்கு பிறகு இரவு 12.10 மணிக்கு போட்டி தொடங்கியது. அப்போது தொடக்க வீரர்களாக களமிறங்கிய கான்வே, ருதுராஜ் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ருதுராஜ் 16 பந்துகளில் 26 ரன்களும், கான்வே 25 பந்தில் 47 ரன்களும் எடுத்து வெளியேற, நல்ல அடித்தளத்தை கொண்டு சென்றனர். அதன் பிறகு நூர் அகமது அபாரமாக பந்துவீசி, சிஎஸ்கே அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தியது மட்டுமல்லாமல், ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்ததினார்.

ரஹானே 27 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி 4 ஓவரில் 54 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. அப்போது ஆட்டத்தின் 12வது ஓவரில் தனது சிவம் துபே , தொடர்ந்து 2 சிக்சர்களை அடிக்க, போட்டியில் திருப்புமுனை ஏற்பட்டது. இதே போன்று மோகித் சாமா வீசிய 13வது ஓவரில் தனது கடைசி ஆட்டத்தில் விளையாடிய ராயுடு 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். 8 பந்தில் 19 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார்.

இதே போன்று கேப்டன் தோனியும் அடுத்த பந்திலேயே கோல்டன் டக் ஆக, போட்டி மீண்டும் குஜராத்துக்கு சாதகமாக மாறியது. இதனையத்து கடைசி 2 ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்டது. முகமது ஷமி அபாரமாக பந்துவீசி வெறும் 8 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்தார். இதனால் சிஎஸ்கே வெற்றிக்கு கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டது.

மோகித் சர்மா வீசிய முதல் பந்து டாட் பாலாக மாற அடுத்த 3 பந்துகளிலும் சிஎஸ்கேவால் சிங்கிளாக தான் எடுக்க முடிந்தது. இதனால் கடைசி 2 பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஜடேஜா, யாருமே எதிர்பார்ககாத வகையில், ஒரு சிக்சரும், கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்ட ஜடேஜா பவுண்டரி அடிக்க, சிஎஸ்கே வீரர்கள் வெற்றியை உற்சாகமாக மைதானத்தில் வந்து கொண்டாடினர்.

Leave A Reply

Your email address will not be published.