பௌத்த விகாரைக்குள் திருட்டு!

அவுஸ்திரேலிய அடிலெய்டில் உள்ள இலங்கையின் பௌத்த விகாரைக்குள் பிரவேசித்த ஒருவர் வழிபாட்டாளர்கள் வழங்கிய பணத்தை திருடிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன் போது அவர் 3000 அவுஸ்திரேலியா டொலர்களை திருடிச்சென்றுள்ளமை சீசீடிவி கமராவில் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர் ஏற்கனவே தெற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள மற்றொரு விகாரையில் அண்மையில் பணத்தை திருடியவர் என்பதும் தெரியவந்துள்ளது.
தெற்கு அவுஸ்திரேலியா விகாரையில் இருந்து அவர் 800 டொலர்களை திருடிச்சென்றதாக முறையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.