ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்
ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளரை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் நேற்று(9) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தனர்.
இச் சந்திப்பின் போது பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட 2013/2014 கல்வியாண்டு மாணவர்களையும் 2014/2015 பொதுக்கலை உள்ளீர்க்குமாறு கோரிக்கையினை முன்வைத்திருந்தனர்.
இவ் விடையம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கையில்,
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல், துணைவேந்தர் நியமனம் பிற்போடப்பட்டமை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் கைதுசெய்யப்பட்டமை, கல்விசாரா ஊழியர்களின் பகிஸ்கரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழ கலைப்பீட மாணவர்கள் பட்டப்படிப்பை பூர்த்திசெய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.
இதனால் 50ஆயிரம் பட்டதாரி நியமனங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட காலப்பகுதியில் 2013/2014 கல்வியாண்டு மாணவர்களுக்கான பரீட்சை முடிவுகள் வெளியிடப்படாததால் வேலைவாய்ப்பிற்காக விண்ணப்பிப்பதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டமை தொடர்பில் ஐனாதிபதியின் செயலாளரிடம் சுட்டிக் காட்டினோம்.
எனினும் தற்போது 50ஆயிரம் பட்டதாரிகளுக்கு மேலதிகமாக 10ஆயிரம் பட்டதாரிகளை உள்ளீர்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது. அவ் நியமனங்களுக்குள் மாணவர்களையும் உள்ளீர்க்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்தோம்.
எனினும் 50ஆயிரம் பட்டதாரிகளுக்கான வேலைவாய்பிற்கு ஏற்கனவே நபர்கள் உள்வாங்கப்பட்டிருப்பதாலும், மேலதிக 10ஆயிரம் நியமனங்களில் ஊழியர் சேமலாப நிதி போன்ற பல்வேறு காரணங்களால் நியமனம் நிறுத்தப்பட்ட பட்டதாரிகள் உள்வாங்கப்படவுள்ளதால் இவ் நியமனங்களில் யாழ் பல்கலைக்கழக பட்டதாரிகளை உள்வாங்குவதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதனை ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் எமக்கு தெளிவுபடுத்தினார்.
எனினும் இவ் வருட இறுதியில் அல்லது அடுத்த வருட நடுப்பகுதிகளில் வழங்கப்படும் நியமனங்களில் எமக்கு முன்னுரிமை அளிப்பதற்கு ஜனாதிபதியின் கவணத்திற்கு கொண்டு செல்வதாகவும் ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் உறுதிமொழியளித்தார்.
மேலும் இனைமருத்துவ விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் தாதிய உத்தியோகத்தர்களாக இனைவதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இவ் விடையம் தொடர்பாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கவணத்திற்கு கொண்டு செல்வதாகவும் உறுதிமொழி வழங்கப்பட்டது.
பல்கலைக்கழக பட்டப்படிப்புக்கள் காலதாமதமாகுவது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கவணத்திற்கு கொண்டு செல்வதாகவும் இது தொடர்பான தீர்கமான முடிவுகள் எடுக்கப்படும் என்ற உறுதிமொழியும் வழங்கப்பட்டது. எதிர்வரும் காலங்களில் நாம் சூட்டிக்காட்டிய எமது பிரச்சினைகள் தீர்கப்படும் என நம்புகின்றோம், என்றனர்.