இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 318 ரூபாவாகும்.
அத்துடன் 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 385 ரூபாவாகும்.
மேலும் சுப்பர் டீசலின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 340 ரூபாவாகும்.
இதேவேளை மண்ணெண்ணை விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 245 ரூபாவாகும்.