தெற்கில் ஒருவர் வெட்டிக்கொலை.

ஹொரண பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு முன்னால் வைத்து நபர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை, சுனாமி வீட்டுத் திட்டப் பகுதியில் வசிக்கும் நபரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
கொலையாளி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் இறங்கியுள்ளனர்.