முடிவுக்கு வரும் ரணில் அரசின் ஆட்டம்! – இவ்வருடம் தேர்தல் வருடம் என்கிறது எதிரணி.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் விரைவில் பெரும்பான்மையை இழந்து விடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அதற்கேற்ற வகையிலேயே இந்த அரசின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. எனவே, அரசு பெரும்பான்மையை இழந்த பின்னர் தேர்தலுக்குச் செல்ல வேண்டும் எனவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார்.
இதனால் இந்த வருடம் தேர்தல் வருடமாகவே அமையும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.