சிவகார்த்திகேயன்.. ட்ரெண்டாகும் நியூ லுக் போட்டோ.

சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் படம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கும் இப்படத்தை தொடர்ந்து அயலான் படமும் ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது. இப்படி பம்பரமாக சுழன்று கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் இப்போது கமல் தயாரிப்பில் நடித்து வருகிறார்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தில் சாய் பல்லவி அவருக்கு ஹீரோயினாக நடிக்கிறார். இப்படி ஆரம்பமே அசத்தலாக சென்று கொண்டிருக்கும் இப்படத்திற்காக சிவகார்த்திகேயன் இதுவரை இல்லாத அளவுக்கு ரிஸ்க் எடுத்து இருக்கிறாராம். இதற்கு முக்கிய காரணம் கமல் என்று சொன்னால் அது மிகையாகாது.
ஏனென்றால் கமல் படத்திற்கு படம் தன்னுடைய கெட்டப்பை மாற்றி அனைவரையும் அசர வைத்து விடுவார். அப்படி இருக்கும் போது அவருடைய தயாரிப்பில் நடிக்கும் நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்த சிவகார்த்திகேயன் இப்படத்திற்காக தன்னுடைய உடலை ரொம்பவும் ஃபிட்டாக மாற்றி இருக்கிறாராம்.
ஏற்கனவே இது குறித்து சலசலக்கப்பட்டாலும் தற்போது மாமன்னன் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த இவருடைய தோற்றம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. தலையில் தொப்பி போட்டு தன்னுடைய ஹேர் ஸ்டைலை மறைத்து இருந்த சிவகார்த்திகேயன் விழா அரங்கிற்கு வந்ததுமே அங்கிருந்த பலரும் அவரை வியந்து பார்த்தார்கள்.
அதைத்தொடர்ந்து மேடையில் பேசிய அவர் கமல் சார் முன்பு இப்படி எல்லாம் பேசக்கூடாது. ஆனால் என் இயக்குனர் பர்ஸ்ட் லுக் போட்டோ வெளிவரும் வரை ஹேர் ஸ்டைலை காட்டக் கூடாது என்று கூறியிருக்கிறார். அதனால் தான் இந்த கெட்டப்பில் வந்தேன் என்று கூறினார். மேலும் பேசிய அவர் உதயநிதி விளையாட்டாக நடிக்க வந்து இப்போது விளையாட்டு துறை அமைச்சராக மாறிவிட்டார் எனவும் தன் பாணியில் கலகலக்க வைத்தார்.
அதேபோன்று அவர் உதயநிதியை அசர வைக்கும் அளவுக்கு மாமன்னன் மேடையை தன்வசப்படுத்தி இருந்தார். அதிலும் அவருடைய இந்த நியூ லுக் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமைந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த வகையில் உலக நாயகனுக்காக ரிஸ்க் எடுத்து நடிக்கும் சிவகார்த்திகேயனின் புது லுக் இப்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.