கோரமண்டல் எக்ஸ்பிரஸ்- சரக்கு ரெயில் மோதி கோர விபத்து.

கொல்கத்தாவில் இருந்து சென்னை புறப்பட்ட கோரமண்டல் விரைவு ரெயில் இன்று இரவு சுமார் 7.20 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹனகா ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சரக்கு ரெயில் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 3 சிலிப்பர் பெட்டிகள் தவிர மற்ற அனைத்து பெட்டிகளும் தடம் புரண்டன. இதனால் பயணிகள் அலறி துடித்தனர். இந்த விபத்தில் பலர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன.
மீட்புக் குழு விபத்து நடைபெற்ற இடத்திற்கு சென்றடைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விபத்து நிவாரண ரெயில் விரைந்துள்ளதாக தென் கிழக்கு ரெயில்வே அறிவித்துள்ளது.