சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த ஜோ ரூட் .
இங்கிலாந்து- அயர்லாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்து முதல் இன்னிங்ஸில் வெறும் 172 ரன்களுக்கு சுருண்டது. அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 524 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது.
ஜேக் கிராவ்லி 56 (45) ரன்களும் பென் டன்கட் சதமடித்து 24 பவுண்டரி 1 சிக்சருடன் 182 (178) ரன்களை விளாசினார். ஓலி போப் இரட்டை சதமடித்து 22 பவுண்டரி 3 சிக்ஸருடன் 205 (208) ரன்கள் விளாசினார். ஜோ ரூட் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 56 (59) ரன்கள் அதைத்தொடர்ந்து 352 ரன்கள் பின் தங்கிய நிலமையில் களமிறங்கிய அயர்லாந்து 2-வது நாள் ஆட்டநேரம் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 97 எடுத்திருந்தது.
இப்போட்டியில் 56 ரன்கள் எடுத்த ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 11,000 ரன்களை கடந்த 2-வது இங்கிலாந்து வீரராக சாதனை படைத்தார். அதை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் 11,000 ரன்களை மிகவும் இளம் வயதில் எடுத்த 2-வது வீரர் என்ற இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையும் முறியடித்து அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
அந்த பட்டியலில் அலஸ்டர் குக் முதல் இடத்திலும் (31 வருடம் 357 நாட்கள்), ஜோ ரூட் 2-வது இடத்திலும் (32 வருடம் 154 நாட்கள்), 3, 4, 5 இடங்கள் முறையே, சச்சின் டெண்டுல்கர் (34 வருடம் 95 நாட்கள்), ரிக்கி பாண்டிங் (34 வருடம் 210 நாட்கள்), ஜேக் காலிஸ் (34 வருடம் 245 நாட்கள்) உள்ளனர். இதற்கு முன்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் 10,000 அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை ஏற்கனவே முறியடித்துள்ளார்.
அவருக்கு தற்போது 32 வயது மட்டுமே நிரம்பியுள்ளதால் இன்னும் 5 வருடங்கள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் (15921) அடித்த வீரர் என்ற சச்சினின் ஆல் டைம் சாதனையை உடைக்க அவருக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.