கஞ்சா போதைப்பொருள் எரித்து அழிக்கப்பட்டது
மல்லாக நீதிமன்றில் சந்தேகநபர்களின்றி கைப்பற்றப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட 686 kg கஞ்சா போதைப்பொருள் எரித்து அழிக்கப்பட்டது .
மல்லாக நீதிமன்றத்தில் ஏறத்தாழ பத்துக் கோடி ரூபா பெறுமதி வாய்ந்த 686கிலோ நிறையுடைய, சந்தேகநபர்களின்றி கைப்பற்றப்பட்ட, கஞ்சா போதைப்பொருள்
நீதிச்சேவை ஆணைக்குழுவின் விசேட அனுமதியுடன் மல்லாகம் நீதிமன்ற கௌரவ நீதிபதிகள் A.G. அலெக்ஸ்ராஜா, A.A. ஆனந்தராஜா , காங்கேசன்துறை தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் கமல் அபயசிறி , மல்லாகம் நீதிமன்றின் பதிவாளர்கள் , உத்தியோகத்தர்கள், பொலிஸ் அதிகாரிகள் பிரசன்னத்துடன் பொதுமக்களுக்கு இடையூறில்லாத வகையில் ஆள் நடமாட்டமற்ற கடற்கரைப் பிரதேசத்தில் எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டது.