ஸ்வீடிஷ் செக்ஸ் ஃபெடரேஷனின் விண்ணப்பம் நிராகரிப்பு : போட்டி நடைபெறாது
ஸ்வீடிஷ் நேஷனல் ஸ்போர்ட்ஸ் ஃபெடரேஷனில் உறுப்பினராவதற்கான செக்ஸ் ஃபெடரேஷன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால், செக்ஸ் சாம்பியன்ஷிபை நடத்துவதற்கு அனுமதிக்கப்படவில்லை.
ஸ்வீடன் செய்தி நிறுவனமான Goterborgs-Posten படி, இந்த ஜூன் மாதம் ஸ்வீடனில் பாலியல் சாம்பியன்ஷிப் நடைபெறும் என்று இணையத்தில் வெளிவந்த செய்தி தவறானது.
இது முதன்முதலில் ட்விட்டரில் வெளியான இந்தச் செய்தியின் விவரங்கள் பல செய்தி நிறுவனங்கள் மூலம் பரப்பப்பட்டு, உலகின் பெரும்பாலான மக்களால் பேசப்பட்ட தலைப்பாகும்.
இந்த நிகழ்வு ஜூன் 8 ஆம் தேதி தொடங்கி பல வாரங்களுக்கு தொடரும் எனவும், பங்கேற்பாளர்கள் ஒவ்வொரு நாளும் ஆறு மணிநேரம் போட்டியிடுவார்கள் என்று செய்தி அறிக்கைகள் தெரிவித்தன.
ஆனால், ஸ்வீடிஷ் செய்தி நிறுவனமான Goterborgs-Posten கருத்துப்படி, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த திட்டம் நிராகரிக்கப்பட்டது. என தெரியவந்ததுள்ளது.
ஸ்வீடனில், ஒரு பாலியல் கூட்டமைப்பு உள்ளது, அதன் தலைவரான டிராகன் பிராக்டிக், ஆண்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் பாலினத்தின் தாக்கத்தை எடுத்துக்காட்டும் ஒரு சாம்பியன்ஷிப்பை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
எனினும், Goterborgs-Posten தனது ஏப்ரல் 26 அறிக்கையில், தேசிய விளையாட்டுக் கூட்டமைப்பில் அங்கத்துவம் பெறுவதற்காக பாலியல் சம்மேளனத்திடம் கொடுக்கப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
ப்ராக்டிக் இந்த ஆண்டு ஜனவரியில் அந்த விண்ணப்பத்தை சமர்ப்பித்தார்.
“இது எங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை, இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்பதை நான் உங்களுக்குத் தெரிவிக்க முடியும். எங்களுக்கு வேறு விஷயங்கள் உள்ளன, ”என்று விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் பிஜோர்ன் எரிக்சன் உள்ளூர் செய்தித்தாளிடம் கூறினார்.
ப்ராக்டிக் ஸ்வீடனில் பல ஸ்ட்ரிப் கிளப்களை நடத்துகிறார், மேலும் பாலினத்தை விளையாட்டாக வகைப்படுத்த வேண்டும் என நம்புகிறார்.
பாலியல் போட்டி நடவடிக்கைகள் அல்லது ‘போட்டிகளுக்கு’ 45 நிமிடங்கள் முதல் 1 மணிநேரம் வரை நேர வரம்பு இருக்க வேண்டும் என்று ட்வீட்களில் குறிப்பிடப்பட்டிருந்தன. ஒவ்வொரு பங்கேற்பாளரும் 5 முதல் 10 புள்ளிகளைப் பெற 16 துறைகள் உள்ளன என்றும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர். சாம்பியன்ஷிப்பிற்காக 20 பேர் பதிவு செய்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவித்திருந்தன.