வற்றாப்பளை பொங்கல் உற்சவத்தில் 17 நகைத் திருட்டுச் சம்பவங்கள் பதிவு!

முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்தில் நேற்று மாலை வரை மாத்திரம் 17 நகைத் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலட்சக்கணக்கான பக்தர்கள் பொங்கலில் பங்கேற்றிருந்தனர். சன நெருக்கத்தை தமக்குச் சாதகமாக்கிய திருடர்கள், நகைகள் மற்றும் பேர்ஸூகளைத் திருடியுள்ளனர். நேற்று மாலை வரையில் 17 நகைத் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
இதேவேளை, பக்தர்களால் தவறவிடப்பட்ட கைப்பை மற்றும் நகை என்பனவும் கண்டெடுக்கப்பட்டு ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டும் இருந்தன.