சண் தவராஜாவின் ‘காணாமல் போனவர்கள்’ சென்னையில் அறிமுகம் (படங்கள்)
இனிய நந்தவனம் பதிப்பக வெளியீடான புலம்பெயர்ந்து சுவிற்சர்லாந்தில் வாழும் எழுத்தாளரும் ஊடகவியலாளருமான சண் தவராஜாவின் ‘காணாமல் போனவர்கள்’ சிறுகதை நூல் அறிமுக விழா சென்னை தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் நிமிர் இலக்கியவட்டம் ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (04.06.2023) நடைபெற்றது
கதை சொல்லியும் நடிகருமான பவா செல்லதுரை நூலை வெளியிட வழக்கறிஞர் அ.அருள்மொழி பெற்றுக்கொண்டு சிறப்புரை வழங்கினார்.
எதிராஜ் கல்லூரி ஓய்வுநிலை தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் அரங்கமல்லிகா மதிப்புரை வழங்கினார்
பதிப்பாசிரியர் நந்தவனம் சந்திரசேகரன், கவிஞர், கவிச்செல்வர் படைப்பக நிறுவனர் சிங்கார சுகுமாரன், சுவடு பதிப்பக பதிப்பாசிரியர் நல்லு இரா.லிங்கம், புதிய சிறகுகள் ஐ.ஏ.எஸ். ஆகாடமியின் நிறுவுனர் தொல்காப்பியன் சிவராசன் ஆசியோர் வாழ்த்துரை வழங்க, நூலாசிரியர் சண் தவராஜா ஏற்புரையாற்ற , கவிஞர் கா.பாபுசசிதரன் நன்றி கூறினார்.
கவிஞர் செ.ரா. கிருஷ்ணகுமாரி நிகழ்வை சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
நிகழ்வுக்கு முன்னதாக காணாமல் போனவர்கள் என்ற தலைப்பிலான கவியரங்கம் கவிஞர் ராஜா முகமது தலைமையில் நடைபெற்றது.