கஜேந்திரகுமாரை கைது செய்தது தவறு : வடக்குக்கு ஒரு சட்டம் , தெற்குக்கு ஒரு சட்டமா?: துஷார இந்துனில் (வீடியோ)
டயானா கமகேவை கைது செய்ய உத்தரவிடப்பட்ட போதும் இரகசியப் பொலிஸார் அதனைச் செய்யவில்லை. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைது செய்கிறார்கள். வடக்குக்கு ஒரு சட்டமும் , தெற்குக்கு ஒரு சட்டமுமா? அரசுக்கு ஒரு சட்டமும், எதிர்க்கட்சிக்கு மற்றொரு சட்டமுமா? ? கஜேந்திரகுமார் எதிர்கட்சிக்காரர் என்பதால் கைது செய்கிறீர்களா என இன்று பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில், பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
டயானா கமகேவுக்கு உள்ள வழக்கை நீடித்துக் கொண்டு அவர் தொடர்ந்து பாராளுமன்றம் வருகிறார். அதேபோல ஒரு பிரச்சனையில் கீதா குமாரசிங்க பதவியை இழந்தார். டயனாவுக்கு ஒரு சட்டமும் , கீதாவுக்கு ஒரு சட்டமும் போல இப்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் இன்னொரு சட்டத்தை செயல்படுத்துகிறார்கள்.
இன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைது செய்துள்ளார்கள்.இதில் தவறுள்ளது. தங்க கடத்தலில் கைதான அலி சப்ரி ரகீம் அன்றே கைதாகி , அன்றே பாராளுமன்றத்துக்கு வருகிறார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எதிர்க் கட்சியில் இருக்கிறார் , அலி சப்ரி ரகீம் அரசில் இருக்கிறார். இப்படி வித்தியாசமாக சட்டத்தை கையாண்டால் அது தவறு. வடக்கில் ஒருவரை கைது செய்தோம் என தெற்கில் உள்ள சிங்களவர்களை மகிழ்ச்சிப்படுத்த செய்த ஒரு முட்டாள் வேலை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைது செய்தது. சிங்கள வாக்குகளுக்காக மிட்டாய் கொடுத்து ஏமாற்றாதீர்கள்.
மத நல்லணக்கம் என மத விவகாரங்களை கையிலெடுத்துள்ளார்கள். அதேபோல இனவாதத்தையும் கையிலெடுக்கிறார்கள். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செய்தது சரியா?பிழையா ? என்பதல்ல இங்கே பிரச்சனை. தெற்குக்கு ஒரு சட்டம். வடக்குக்கு ஒரு சட்டமா? சப்புவதற்கு டொப்பி (இனிப்பு) இல்லாத போது , புது டொப்பிகளை கொடுத்து சப்ப வைப்பது தவறு. வாக்குகளுக்காக நாடகம் ஆட தேவையில்லை.
எனவே வடக்கிற்கு ஒரு சட்டமும் தெற்கிற்கு வேறு ஒரு சட்டமும் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளதாக துஷார இந்துனில் எம்.பி. பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.