மிகவும் கொடூரமானது.. உக்ரைன் அணை தாக்கப்பட்டது குறித்து ஐநா பொது செயலாளர் கருத்து.
உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் தீவிரமைடந்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கிய போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், உக்ரைனின் மிகமுக்கிய நதி டினிப்ரோ ஆற்றில் கட்டப்பட்ட ககோவ்கா அணை மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் உடைந்து போன அணையில் இருந்து வேகமாக நீர் வெளியேறி வருகிறது.
அணை உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் அண்டோனியோ குட்ரெஸ் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இன்றைய தாக்குதல் மக்கள் மீதான போருக்கு கொடுக்கும் கொடூர விலைக்கு மற்றும் ஓர் உதாரணம். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பாதிக்கப்படுவோரின் அவலக்குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. இது நிறுத்தப்பட வேண்டும், என்று தெரிவித்தார்.