கோட்டாபய நியமித்த ஆளுநர் , பதவி விலகுவதாக ரணிலிடம் தெரிவிப்பு !

சப்ரகமுவ ஆளுநர் டிகிரி கொப்பேகடுவ தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
ஜூன் 10, 2023 முதல் அந்தப் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
செப்டம்பர் 18, 2019 அன்று, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சப்ரகமுவ மாகாண ஆளுநராக டிகிரி கொப்பேகடுவவை நியமித்தார்.
இதன்படி சப்ரகமுவ மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க நியமிக்கப்படவுள்ளார்.