வாகன விலையில் மாற்றம்
இலங்கையில் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக வாகன விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எரிபொருள் விலை வீழ்ச்சியும் டொலரின் பெறுமதி வீழ்ச்சியும் இதற்குக் காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எவ்வாறாயினும், வாகன உதிரி பாகங்களின் விலை, வாகன பராமரிப்பு (சேவை) கட்டணம், காப்புறுதி கட்டணம் மற்றும் குத்தகைக் கட்டணம் ஆகியவற்றில் இருந்து மக்களுக்கு இன்னும் நிவாரணம் கிடைக்கவில்லை என வாகன விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எதிர்காலத்தில் இவற்றின் விலை குறைவினால் வாகன விற்பனையில் அதிகரிப்பை காண முடியும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போது சந்தையில் விற்பனை செய்யப்படும் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலை ,
Premio (2017) பிரீமியோ (2017) – 130 லட்சம் முதல் 135 லட்சம் வரை
Aqua G (2012) அக்வா ஜி (2012) – 48 லட்சம் – 56 லட்சம் வரை
Vezal (2014) – 72 லட்சம் – 80 லட்சம் வரை
Fit (2012) – 47 லட்சம் / 53 லட்சம் வரை
Vitz (2018) – 71 லட்சம் / 76 லட்சம் வரை
Grace (2014) கிரேஸ் (2014) – 69 லட்சம் / 74 லட்சம் வரை
X-trail (2015) எக்ஸ்-டிரெயில் (2015) – 83 லட்சம் / 100 லட்சம் வரை
WagonR (2014) வேகன்ஆர் (2014) – 38 லட்சம் / 45 லட்சம் வரை
Mahindra KUV 100 (2020) மஹிந்திரா KUV 100 (2020) 38 லட்சம் / 45 லட்சம் வரை
Alto japan (2017) ஆல்டோ ஜப்பான் (2017) – 40 லட்சம் / 45 லட்சம் வரை
Panda (2015) பாண்டா (2015) 19 லட்சம் / 23 லட்சம் வரை
Alto (2015) ஆல்டோ (2015) – 25 லட்சம் / 27 லட்சம் வரை