மக்களின் பேச்சுரிமையைப் பாதுகாக்கவும்… அமெரிக்க தூதர்
ஒரு நாடு என்ற வகையில், மக்களின் கருத்துக்களை வெளியிடும் உரிமையை இலங்கை பாதுகாக்க வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு குடிமகனுக்கும் கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்வதே ஜனநாயகத்தின் முழுச் சாரம் என்றும் அமெரிக்கத் தூதுவர் அதே ட்விட்டர் செய்தியில் கூறுகிறார்.
“இந்த அடிப்படை உரிமையின் பாதுகாப்பானது அனைத்து இலங்கையர்களுக்கும் நிலையான, பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு அடித்தளமாக இருக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
At the core of every democracy is the right to freedom of expression for every citizen. The protection of this fundamental right must continue to be a cornerstone of SL’s efforts to re-build a stable, secure, and prosperous future for all Sri Lankans.
— Ambassador Julie Chung (@USAmbSL) June 8, 2023