ரஷியாவில் உள்ள கட்டிடம் மீது டிரோன் தாக்குதல்.
ரஷியா- உக்ரைன் போரில் தற்போது டிரோன் தாக்குதல் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ரஷியாவின் மாஸ்கோ நகர் அருகே அடுக்குமாடி கட்டிடம் ஒன்று டிரோன் தாக்குதலுக்கு உள்ளானது. அதில் சிலர் காயம் அடைந்தனர். பதிலுக்கு ரஷியாவும் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதற்கிடையே மிகப்பெரிய அணையை குண்டு வைத்து தகர்த்ததாக இரு நாடுகளும் பரஸ்பர குற்றச்சாட்டை வைத்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இன்று இருநாட்டு எல்லையில் அமைந்துள்ள தென்மேற்கு ரஷியாவின் மத்திய வொரோனெஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு டிரோன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதில் அந்த கட்டிடம் சேதம் அடைந்துள்ளதாகவும், 3 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், உயிர்ச்சேதம் ஏதும் இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.