எந்தவொரு தேர்தலுக்கும் மொட்டுக் கட்சி தயாராம்! – மீண்டும் கூறினார் மஹிந்த.

எந்தவொரு தேர்தலுக்கும் தமது கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருக்கின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது இலத்திரனியல் ஊடக ஒழுங்குமுறை நிறுவனங்கள் மற்றும் ஒலிபரப்பு அதிகார சபை சட்டமூலம் தொடர்பிலும் மஹிந்த ராஜபக்ச கருத்து வெளியிட்டார்.
“நாங்கள் இன்னும் அந்தச் சட்டமூலத்தைப் பார்க்கவில்லை. தற்போது ஊடகம் சுதந்திரம் உள்ளது தானே” என்றும் அவர் கூறினார்.