இந்தியாவின் கடும் அழுத்தத்தால் முதலில் மாகாண சபைத் தேர்தல்?

இந்தியாவின் கடும் அழுத்தம் காரணமாக முதலில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படலாம் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார் என சிங்கள இணைய ஊடகமொன்று இன்று (10) செய்தி வெளியிட்டுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுடன் மொட்டுக் கட்சி தலைமையகத்தில் நேற்று (09) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பஸில் ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார் எனத் தெரியவருகின்றது. .
இந்தியாவின் அழுத்தத்தால் மாகாண சபைத் தேர்தலை முதலில் நடத்த வாய்ப்புள்ளதால், அதனை எதிர்கொள்வதற்குத் தயாராகுமாறு கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு பஸில் ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த மாதம் 10 ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கவுள்ளார் எனவும், இதன்போது மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமாக தீர்மானம் எடுக்கப்படலாம் எனவும் பஸில் ராஜபக்ச தகவல் வெளியிட்டுள்ளார்.