கடலில் மூழ்கிய மூவரை உயிருடன் மீட்ட எஸ்.ரி.எப்.

அறுகம்பே கடற்கரையில் நீராடச் சென்ற மூவர் காணாமல்போன நிலையில் விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
மஹியங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த மூவரை இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
40 வயதுடைய பெண் ஒருவரும், 11 வயதுடைய சிறுவனும், 17வயதுடைய இளைஞரும் கடலில் மூழ்கி இன்று காணாமல்போன நிலையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.