மும்பை விடுதியில் இளம் மாணவி கொலை வழக்கில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்…!
மகாராஷ்டிராவின் விதார்பா பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண், மும்பையின் சார்னி சாலையில் உள்ள அரசு விடுதியின் 4வது தளத்தில் தங்கி படித்து கல்லூரியில் வந்தார். இவரின் அறையில் உள்ள மற்ற பெண்கள் ஊருக்கு சென்ற நிலையில், ஜூன் 6ஆம் தேதி அன்று தனியாக அறையில் இருந்துள்ளார். இந்நிலையில், அடுத்த நாள் காலை அந்த பெண் தனது அறையில் மர்மான முறையில் தூக்கில் தொங்கியுள்ளார்.
இளம்பெண்ணின் உடலை போலீசார் கைப்பற்றிய நிலையில், அவரது செல்போனை ஆராய்ந்து பார்த்து விசாரித்தனர். விடுதியில் காப்பாளராக பணியாற்றிய கனோஜியா பிரகாஷ் என்பவர் சம்ப தினத்தன்று மாயமான நிலையில், அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தான் அதிர்ச்சி தரும் வகையில் ஓம் பிரகாஷ் ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
விடுதி பாதுகாவலர் ஓம் பிரகாஷ் தனியாக இருந்த 18 வயது மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி பின்னர் கொலை செய்துள்ளார். பின்னர் மாட்டிக்கொள்வோம் என பயந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக அங்கிருந்தவர்களிடம் விசாரித்ததில் பல அதிர்ச்சி தகவல்கள் அம்பலமாகியுள்ளது. விடுதியில் சில ஊழியர்கள், வார்டன் ஆகியோர் அங்கு தங்கி இருந்த மாணவ மாணவிகளை தரக்குறைவாக பேசி அவமதிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
அத்துடன் அங்கு அடிக்கடி சிசிடிவி கேமராக்கள் ஒழுங்காக வேலை செய்வதில்லை எனவும், அந்த சூழலில் கூட அங்கு வேலை பார்க்கும் ஆண் ஊழியர்களை பெண்கள் தங்கியிருக்கும் விடுதி பகுதிகளில் இரவு நேரத்தில் தங்க விடுதி நிர்வாகம் அனுமதிக்கும் என்றுள்ளது.
மேலும் அந்நிய நபர்கள் சர்வசாதாரணமாக விடுதிக்கு வந்து செல்கிறார்கள் எனவும், பெண்கள் தங்கியிருக்கும் விடுதி பகுதியில் அங்கு பணியாற்றும் ஆண் ஊழியர்கள் சுய இன்பம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர் எனவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தோழியும் விடுதியில் தங்கி இருக்கும் சக பெண்களும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.