மொட்டு கட்சி எதிர்ப்புக்கு பின்னர், இன்று அனைத்து தரப்பினருக்கு மீண்டும் அழைப்பு!

மொட்டு கட்சியின் எதிர்ப்புக்கு பின்னர்
இன்று மாலை 5 மணிக்கு அரசு
மீண்டும் மற்றோர் கூட்டமொன்றுக்கு
அரசில் அங்கம் வகிக்கும்
அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு!
அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளுக்கான விசேட கூட்டமொன்றை இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்காக அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தரப்பினரையும் உத்தியோகபூர்வமாக அழைப்பதற்கு பிரதமர் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று முன் தினம் ஜனாதிபதி செயலகத்தில் அவ்வாறான கூட்டமொன்றை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்த போதிலும் மொட்டு கட்சியை சேர்ந்த மாவட்டத்தின் பெரும்பான்மையான தலைவர்கள் கூட்டத்தை புறக்கணிக்க நடவடிக்கை எடுத்திருந்தனர்.
மொட்டு கட்சிக்கு உத்தியோகபூர்வ அறிவித்தல் வழங்காமல் மொட்டு கட்சியின் மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு அரசாங்க தரப்பிலிருந்து தனித்தனியாக இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டமையே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பிற்கு நாமல் ராஜபக்ஷவை அழைத்த போது, மொட்டு கட்சியில் உள்ளோரை , தனித்தனியாக அழைப்பதை விடுத்து கட்சியாக அழைப்பதே பொருத்தமானது என நாமல் ராஜபக்ஷ எம்.பியும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு முன்னரும் ஜனாதிபதியின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், மொட்டு கட்சி பொதுச் செயலாளர் சாகர காரியவசம் , அதற்கு ஜனாதிபதி முன்னிலையில் தமது கடும் எதிர்ப்பை தெரிவிக்க நடவடிக்கை எடுத்தார்.