ஒலிம்பிக் விக வெற்றி பெற்று

யாழ். கால்பந்தாட்ட லீக் அங்கத்துவக் கழகங்களுக்கு இடையில் நடத்தும் 7 பேர் பங்கு பங்கு பற்றும் 25 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் இன்று 10 ஆம் திகதி வியாழக்கிழமை அரியாலை கால்பந்தாட்ட பயிற்சி நிலைய மைதானத்தில் ஆரம்பமாகியது.
இரண்டாவது ஆட்டத்தில் ஒலிம்பிக் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து திருக்குமரன் விளையாட்டுக் கழக அணி மோதியது. இரண்டு அணியினரும் ஆட்ட நேரத்தில் ஏது வித கோல்களையும் பதிவு செய்யாது போக ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.. வெற்றி தோல்வி காண்பதற்கு சமநிலை தகர்ப்பு உதைகள் வழங்கப்பட்டது. இதில் ஒலிம்பிக் விளையாட்டுக் கழக அணி 2 : 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.