பிரான்ஸில் உரையாற்ற ரணிலுக்கு அழைப்பு!

புதிய பூகோள நிதியுதவி உடன்படிக்கைக்கான உலகளாவிய தலைவர்களின் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றவுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார்.
இந்த மாநாடு எதிர்வரும் 22 மற்றும் 23ஆம் திகதிகளில் பாரீஸில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.