தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் மூவர் கைது!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவி வாசுகி சுதாகர், மகளிர் அணிச் செயற்பாட்டாளர் கிருபா கிரிதரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தீபன் திலீசன் ஆகியோர் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மருதங்கேணி விவகாரம் தொடர்பில் இன்று விசாரணைக்காகக் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெற்ற பின்னர் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.